முதல் தீக்குச்சி !!!

ஆயுதம் எடு ! ஆனவம் சுடு !! தீப்பந்தம் எடு ! தீமையைச் சுடு !!

அன்பான தமிழ் வலைப்பதிவர்களுக்கு வணக்கம்!

நான் வலைப்பதிவுலகிற்கு புதியவன்!!

வலைப்பதிவு தொடங்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை!!

வலைப்பதிவை தொடங்குவதற்காக நான் பல நாட்களாக பல தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து வருகிறேன். தமிழ் மொழியின் பெருமையை கண்டு வியந்தேன்!!

இங்கு நான் கண்ட இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது, வருத்தத்திற்கு உள்ளாக்கியது...
  • சில வலைப்பதிவுகளில் சில குறிப்பிட்ட பதிவிற்கான விவாதங்களில் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. எல்லை மீறி காணப்படுகிறது... மாறி மாறி வசை பாடியிருப்பதை அறிய முடிந்தது... ஏன் இப்படி?

நமது படைப்புகளை, திறைமைகளை வெளிக்கொணர கிடைத்த வலைப்பதிவை ஏன் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தக்கூடாது?

நமது மாறுபட்ட கருத்தை ஏன் இவ்வாறு வெளிக்காட்ட வேண்டும்? தாய் மொழியில் உலகத்தமிழர்கள் அனைவரும் வலைப்பதிவில் நட்பு பாராட்டி வரும் வேளையில் இதன் மூலம் முகம் சுழிக்க வேண்டுமா?

  • சில வலைப்பதிவுகளில் குறிப்பாக மூத்த பதிவர்களின் சில வலைப்பதிவுகளில் கருத்துரை பகுதியில் பதிவிற்கான கருதுரையைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் உள்ளன!!! கருத்துரைப்பகுதியை சாட்டிங் எனப்படும் அரட்டை பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர்!!!

அதற்குத்தான் கூகிள் டாக், யாஹூ மேசென்ஜெர் என பல வசதிகள் உள்ளனவே?

இதில் வேதனை என்னவென்றால் மூத்த பதிவர்கள் இவ்வாறு செய்வதுதான்...

பதிவு நன்றாக இருந்து கருத்துரை படிக்கும் போது இவ்வாறு சாட்டிங் அரட்டை இருப்பதால் விவாதங்கள் கருத்துக்கள் தடை படுகிறது...

அக்கருத்து அனைவரிடமும் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது...

சிந்திக்க வேண்டும்!!!

Views


12 comments:

சர்தாம்ப்பா.!

// தாமிரா சொன்னது... சர்தாம்ப்பா.! //

முதல் வருகைக்கும் முதல் கருத்திற்க்கும் நன்றி.

முதல் பதிவிலேயே தெளிவான சிந்தனைகளை வெளிப் படுத்தி இருப்பதற்கு வாழ்த்துக்கள். மேலும் பல தரமான சிந்தனையை தூண்ட வல்ல சிறந்த பதிவுகளை இடவும் வாழ்த்துகள்

நானும் கூட பதிவு வலைக்கு புதியவன்தான். ஆரம்பித்து இரு மாதங்களே ஆகின்றன. என்னுடைய பதிவு வலைக்கு ஒரு முறை வந்து பாருங்கள். வந்து உங்கள் கருத்தினை கூறுங்கள்.

http://sandhainilavaram.blogspot.com/

ரொம்ப‌ சர்தாம்ப்பா.!

// Maximum India Said... முதல் பதிவிலேயே தெளிவான சிந்தனைகளை வெளிப் படுத்தி இருப்பதற்கு வாழ்த்துக்கள். மேலும் பல தரமான சிந்தனையை தூண்ட வல்ல சிறந்த பதிவுகளை இடவும் வாழ்த்துகள் //

பின்னூட்டத்திற்க்கு நன்றி...

// நானும் கூட பதிவு வலைக்கு புதியவன்தான். ஆரம்பித்து இரு மாதங்களே ஆகின்றன. என்னுடைய பதிவு வலைக்கு ஒரு முறை வந்து பாருங்கள். வந்து உங்கள் கருத்தினை கூறுங்கள்.

http://sandhainilavaram.blogspot.com/ //

தங்களின் வலைப்பதிவிற்க்கு சென்று பார்த்தேன்... நன்றாக உள்ளது... தாங்களும் சிறந்த பின்னூட்டம் இடுவது எப்படி? என்ற பதிவை இட்டுள்ளீர்கள்... நன்றாக உள்ளது... அப்புறம் உங்களது முழு விவரத்தையும் (Profile) பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தேன்... முடியவில்லை...

// விலெகா said... ரொம்ப‌ சர்தாம்ப்பா.! //

பின்னூட்டத்திற்க்கு நன்றி...

கருத்திற்கு நன்றி... வரும் போது எல்ல்லோரும் இது போன்ற கருத்துக்களுடன் தான் வருகிறார்கள்... சரக்கு இருக்கும் வரை போடுகிறார்கள்.. அப்புறம்... கும்மி அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்....


நீங்களாவது நீங்கள் சொன்னவற்றை செய்யாமல் தனித்து நில்லுங்கள்

//கருத்திற்கு நன்றி... வரும் போது எல்ல்லோரும் இது போன்ற கருத்துக்களுடன் தான் வருகிறார்கள்... சரக்கு இருக்கும் வரை போடுகிறார்கள்.. அப்புறம்... கும்மி அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்....
நீங்களாவது நீங்கள் சொன்னவற்றை செய்யாமல் தனித்து நில்லுங்கள்//

அட நம்ம ஊறுக்கார பயலா

வருக வருக.

ஆமங்க அன்னானி சொன்ன மாதிரி

தனித்து நில்லுங்கள்.

வாழ்த்துகள்!

உங்களது பதிவை தமிழர்ஸில் இணையுங்கள்
உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

உங்களது பதிவை தமிழர்ஸில் இணையுங்கள்

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

மிக அழகான சிந்தனையுடன் துடங்கி இருக்கிறீர்கள்

வாழ்த்துகள் நண்பா

Post a Comment