தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்!
தமிழ் வலைப்பூக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதா? என்ற எண்ணம் சில நாட்களாக எழுந்து விட்டது!
தமிழ் வலைப்பூக்களில் சினிமா, Cut, Copy,Paste போன்றவைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது! வாசகர்களிடம் படைப்புகளுக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டதை தமிழிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் போன்ற திரட்டிகளில் வரும் வாக்குகள் மூலம் தெளிவாகிறது.
நான் தமிழிஷில் வலைப்பூக்களை படித்துகொண்டிருக்கும் போது எனது நண்பர்கள் பார்த்தார்கள். அதில் வந்த வலைப்பூக்களின் உள்ளடக்கத்தை பார்த்து விட்டு தமிழ் வலைப்பூக்களின் மீது வேறு மாதிரியான விமர்சனங்களை வைத்தார்கள்.
சில கருத்துக்களை ஏற்று கொள்ளவேண்டியிருந்தது.
இப்போது தமிழ் வலைப்பூக்களை அவர்கள் முன்னால் திறப்பது கொஞ்சம் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு நான் ஆக்கப்பூர்வமாக உபயோகப்படுத்தப்படும் வலைப்பூக்களை காட்டினேன். பலனில்லை!
விளைவு! இந்த பதிவு!!
என்னைப்பொறுத்தவரை ஆக்கப்பூர்வமகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது! என்று கருதுகிறேன்!.
உங்களது எண்ணங்களை இந்த வாக்குகள் மூலம் தெரிவியுங்கள்.
உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள்!
நன்றி!!
Views
0 comments:
Post a Comment